என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்

நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!

நிஜமாவா, எப்படி?

அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!’…

===========

அம்மா……… அப்பாவ எங்கு தேடியும் காணோமே??

ஏண்டா மொய் எழுதற எடத்துல தேடினே?…பந்தியிலே தேடிப்பாரு கிடைப்பாரு அந்த தின்னி பண்டாரம்..!!??
================
ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்:
“”ரொம்ப சாரிங்க… உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன்.
அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது”

கணவன் நிதானமாகச் சொன்னான்:
“”கவலைப்படாதே… வேறு நாய் வாங்கிக்கலாம்”
===============
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, குரங்கு ஒன்று உள்ளே வந்துவிட்டது …

ஆசிரியர் மாணவர்களிடம் : யாருடா .. இது, நியூ அட்மிஷனா ?

மாண்வர்கள் ஆசிரியரிடம் : இல்ல சார், நியூ அப்பாய்ன்மென்டு…. ன்னு தோணுது…
=================
நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?

டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..!
” கொழுப்பு”..
===============
அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

பேஷண்ட் நெஞ்சை விரலால் தட்டிப் பார்த்து
இருதயத்தில் ஓட்டை என்கிறாரே?
================
அப்பா; படிக்கற வயசுலே உனக்கு எதுக்கடா செல்போன்
வாங்கித் தரணும்?

சரி, அப்ப நான் படிக்கலை! செல்போன் வாங்கிக் கொடுங்க!
==================
குடிச்சிட்டு ஏன்யா வண்டி ஓட்டறே?

குடிக்கலைன்னா…..தான் என் கை நடுங்கும், ஆக்ஸிடென்டு…….ஆயிடும் சார்!
===============

மந்திரி : மன்னா! தங்களைப் புகழ்ந்து பாட புலவர் சொக்கன்
வந்துள்ளார்!

மன்னன் : கஜானா காலி, வேண்டுமானால் கடனுக்குப் பாடிவிட்டு போகச் சொல்!
(கடனுக்கு வேண்டுமானால் பாடு
என செய்தி சொன்ன மந்திரியிடம்
சம்மதம் கூறி உள்ளே வந்த புலவன்…)

“மன்னா உன் மேல்மாடி காலி..உலகறிந்தது…
காசில்லாமல் கஜானா காலி என்பது நானறிந்தது…
மன்னா..நீயும் போனே…வீணா..
என உலகம் கூறும்..காசு குடுக்காம போனா… ”
என பாட துவங்க…
யோவ்..எந்த கருமாந்திரத்தையாவது..
குடுத்து விரட்டுய்யா..இந்த ஆள.. என..மன்னர் சூடானார்..
என்பது பின்கதை..)
=====================
கணவன்:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா?

மனைவி:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?

கணவன்:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
=======================
புதுமுகத்தைப் போட்டதால ஜெயிலுக்கு வந்துட்டீங்களா, ஏன்?

ரூபாய் நோட்டுல காந்திக்குப் பதிலா வேற ஒருத்தரைப் போட்டு அச்சடிச்சேன், அதான்!
=============
டாக்டர்: எதுக்கு நாதஸ்வரத்தைக் கொண்டுவந்து என்கிட்டே காட்டுறீங்க…?

வித்வான்: நீங்கதானே என்னோட பீப்பி பார்க்கணும்னு சொன்னீங்க..
=====================
தலை தலைவர் பேசற இடமெல்லாம் கூட்டமா இருக்காமே, அப்படியா?

பின்னே….அவர் தி.நகர்லயும், மெரினா பிச்சுலேயும், மூர்மார்க்கெட்லேயும் மட்டுமே பேசினா….கூட்டம் இல்லாம என்ன இருக்கும்…!
===================
எந்தக் கொம்பனாலும் எழுதப் படிக்க
முடியாத எழுத்து எது தெரியுமா?”

“தெரியலியே!”

“ தலை எழுத்து!”
===========
தலைவருக்கு லொள்ளு ஜாஸ்தி!

ஏன்?

குழந்தைக்கு பெயர் வைக்க சொன்னால்
குழந்தையோட அம்மாவுக்கு ‘நமீதா’-ன்னு
பட்டப் பெயர் வைக்கிறாரே!
===========
அந்த கதாசிரியர் எந்த நேரமும் காதுல பஞ்சு
வச்சுக்கிட்டு எழுதுராறே ஏன்?

சூ, சத்தம் போடாதே! அவர் பஞ்சு டயலாக்
எழுதுராறரு!
=======================
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே…

நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?

============
எல்லா படத்துலயும் இன்ஸ்பெக்டர் வேஷத்துல நடிச்சது நல்லதாப் போச்சு…”

“ஏன்…?”

“கபாலி எனக்கும் மாமூல் தர ஆரம்பிச்சுட்டான்!”
==============
“கபாலிக்கு நேத்தைக்கு பிறந்த நாள் போலிருக்கு ஏட்டய்யா…”

“நேத்து திருடு போன வீட்டுல, பலூன் கட்டி, கேக் வெட்டினதுக்கான எவிடென்ஸ் கிடைச்சிருக்கு…!”
==================

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  • 7
  •  
  •  
  •  
  •