Tamil Mokkai Jokes October 2012

“எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?”
“இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே”
“எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!”
===============
“ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?”
“நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு…”
==============
“வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?”
“அப்படியே அப்பனையே உரிச்ச
ு வ
ைச்சிருப்பான்.”
==============
இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து….
“யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..”
“ஏன்..?”
“பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!”
================
“பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்”
“ஓ!…… சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு”
==========
சாயங்காலம் கூவற மாதிரி எங்கேயாவது சேவல் ஒன்னு கிடைக்குமா?

எதுக்கு?

எங்க ஆபிசுக்குத்தான்!
==================
புதுசு புதுசா கார் வாங்கி ஓட்டறீங்கே, சிரமம் இருக்காதா?

அதெல்லாம் ஒண்ணும் இல்லே…இப்ப மணிக்கு 160 மைல் வேகத்துலே…போய்க்கிட்டிருக்கோம்…தெரியுமா? ஆனாலும் இந்தக் காரிலே ஒரே ஒரு விஷயம்தான் எங்கே இருக்குன்னு தெரியலே!

எது?

பிரேக்!
==================
டப்பிங் பேச கூப்பிட்டதுக்கு ஏன் நடிகை டென்ஷன் ஆகறாங்க!
அவங்க கூப்பிட்டது ஹீரோவுக்கு டப்பிங் பேசவாம்!!!???
===========
தண்ணியடிச்சிட்டா தலைவருக்கு தலை,கால் புரியறதில்லை!

என்ன செய்தாரு?

பனியனை கால் வழியா கழட்டறதுக்கு முயற்சி பண்றாரே!
===============
ஏங்க…உங்ககிட்டே கடன் வாங்க உங்க நண்பர் வந்திருக்காரு…

நான் வீட்டில் இல்லன்னு சொல்ல வேண்டியதுதான..?

அதெப்படி பொய் சொல்ல முடியும்…நீங்க பாத்திரம் தேய்க்கிற சத்தம் தெருவரை கேட்குதே…!!!???
=========
நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம்….. செய்யணும் டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன்….. காரியம் எல்லாம் ஐயர் தான் செய்வார். …
==============
நான் என் மனைவியை செல்லமா ‘சீனா’ன்னு கூப்பிடுவேன்…!

ஏன் குள்ளமா இருப்பாங்களா?

இல்ல தங்கமா வாங்கி குவிக்கிறாளே…!
==========
பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே தலைவரை பேசவிட்டது
தப்பா போச்சுது…!

அப்படி என்ன பேசினார்?

பள்ளிக்கூடத்துப் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காத நானே பல கோடி சம்பாதிக்கும்போது, பல்கலைக் கழகத்தில் படிக்கும் நீங்கள் பல்லாயிரம் கோடி சம்பாதிக்க வேண்டாமா?ன்னு பேசிட்டார்..!
==========
எதுக்கு சம்மந்தமில்லாம நீங்க சொட்டு மருந்து
கேட்கறீங்க?

என் மருகளோட நீலிக்கண்ணீரை நிறுத்தணும்…!
=========
என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க….. ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?

இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
===============
மாப்பிள்ளை பையன் ஊமை பரவாயில்லையா ?

பரவாயில்லை .. .. பரவாயில்லை .. ..எப்படியும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வாயைத் திறக்கப் போறதில்லையே….
=================
டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?

ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
===============
ஏண்டீ என் கல்யாண பட்டு வேட்டி பத்திரமா இருக்கா ..

.சின்னதா ஒரே…ஒரு மாற்றம் …பாத்திரமா இருக்கு .
==============
மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க

கணவன்: ஏன் .. .. ?

மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே
============
“உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா..?”

“எனக்கு ரெண்டு மூணு வீடு இருக்கு … நீங்க எந்த வீட்டைக் கேக்கறீங்க டாக்டர்?”
========
“செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டினால் அபராதம்னு உமக்குத் தெரியாதா?”

“தெரியும்…. நான் பேசலே…
என் மனைவி திட்டிக்கொண்டு பேசுவதை தான் கேட்டுக்கிட்டிருக்கேன்…”
==========
“நீங்க இப்ப மிகப்பெரிய கண்டத்துல இருக்கீங்க…”

“ஆமா… நானும் படிச்சிருக்கேன்! ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!”
=================
“சார், செத்தவனின் பாடியையும் காணோம், கொலைகாரனும் தலைமறைவாகி விட்டான். இப்ப என்ன சார் பண்றது?”

“கொலையானவனும் கொலையாளியும் சமாதானமாகிவிட்டனர்னு ஃபைலை க்ளோஸ் பண்ணிடு!”
=================
“எதுக்கு, உங்க பையனோட பிராக்ரஸ் ரிப்போர்ட்டோட வந்திருக்கீங்க?”

“நீங்க தானே டாக்டர் எல்லா ரிப்போர்ட்சும் எடுத்துக்கிட்டு ட்ரீட்மென்டுக்கு வரச் சொன்னீங்க!
=================
உங்க கிட்னி டோட்டலா டேமேஜ் ஆகிடுச்சு…”

“சரி… சரி…ஆஃப் ரேட்டுக்காவது எடுத்துக்கங்க டாக்டர்..!”
===================
“ஒர்க் ஷாப் வைக்க பேங்க்ல லோன் கேக்கறீங்களே… முன் அனுபவம் இருக்கா?”

“இருக்கு சார்…. இதுவரை பல பேங்க்ல லோன் கேட்டிருக்கேன்!”
==============
“இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்…”
“பனியன்கூட போட்டிருக்கக்கூ டாதா டாக்டர்…?”
=============
“என்னங்க…. கல்யாணத்துக்கு வந்துட்டு, மொய் எழுதாமப் போறீங்க?”
“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்க!”
=============

“ரொம்ப நேரமா உலக வரைபடத்துல என்ன தேடுறீங்க?”

“எல்லா நாடும் இருக்கு. ‘கொடநாடு’ காணோமேய்யா!”
==========
என்னங்க வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளா?

உங்களுக்குத்தான் வீடே கிடையாதே?

அதனால்தான் வீட்டோட கேட்கிறேன்!
==============
தலைவர் ஏன் திடீர்னு தற்கொலைக்கு முயற்சி பண்ணினார்…..?

செத்தா சிவலோகப் பதவி கிடைக்கும்னு சொன்னாங்களாம்….!
================
கவர்ச்சி நடிகை சொந்தப்படம் தயாரிக்கப் போறாங்களா.. .

டைட்டில் என்ன ?

மூடி வாழ்ந்தால் ஏது நன்மை!
==============
ஏன் அந்த சர்க்கரை இருக்கற டப்பாவுக்கு ஊசி போடுறே?

டாக்டர்தான் சர்க்கரைக்கு தினமும் ஊசி போடணும்னு
சொன்னாரு…!
==================
புத்தகம் படிச்சதுக்காக டாக்டரை கைது பண்ணிட்டாங்களா..?
அப்படி என்ன புத்தகம் படிச்சார்?

முப்பது நாளில் டாக்டர் ஆவது எப்படின்னனு புத்தகம்
படிச்சாராம்…!
==============
‘’கல்யாணத்துக்கு அப்புறம் நான் அவருக்கு அடங்கி
நடக்கணுமாம்..அவரு சொல்படி எல்லாம் நடக்கணுமாம்!
என் காதலர் சொல்றார்!’’

‘’அப்படிப்பட்டவனை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கப் போற?’’

‘’அந்த ஆள் அப்படி நினைக்கிறது எவ்வளவு தப்புன்னு அவருக்குப் புரிய வைக்க வேணாமா?’’
=============
எதுக்கு டாக்டர் உங்களுடன் என்னை வர வேண்டாம்னு
சொல்றீங்க?

நர்ஸ் , நீ வந்தால் பேஷண்டுகளின் பிபி எகிறிடுது…
அதனால் சரியான பி.பி.யைக் கண்டு பிடிக்க முடியலை…!
============
நீங்க கடன் வாங்கி வீடு கட்டினீங்க, சரி….
வீட்டு வாசல்படியை ஏன் பின்பக்க்ம் வெச்சிருக்கீங்க?

நாளைக்கு ஒரு கடன்காரனும எங்க வீட்டு முன்னால் வந்து நிக்கக்கூடாது பாருங்க……!
=====================
” ஏதோ ….உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது ! “

” அப்படியா… இல்லைன்னா ?”

” நிறையவே பெய்யும் ! “
================
“கண்ணே, நம்ப காதலைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே”

“மூளையில்லாதவன் கூட உன்னை காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.”
===============
”நான் சாப்பாடு பரிமாறும்போது என் கணவர் சிரிச்சுகிட்டே
சாப்பிடுவாரு….”

”உன் கணவர்கிட்டே எனக்கு பிடிச்ச விஷயமே, கஷ்டத்துலே கூட
அவரு சிரிக்கறதுதான்!”
=============
” சிஸ்டர் ! நான் ஆப்ரேஷன் முடிஞ்சு , நல்லபடியா வீடு
போய் சேருவேன்ல ? “

” நல்ல ‘ பாடி ‘ யா வீடு பொய் சேருவீங்க ! “
==============
என்னங்க இது, பெட்ல….. மாதிரைகளை அள்ளிப் போடுறீங்க?

படுக்கும்போது மாத்திரைகளைப் போட்டுக்கிட்டுப்
படுக்கணும்னு டாக்டர்தாண்டி சொன்னார்…!
==============
அந்த டாக்டர் உன்னைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காரே..?

எப்படிங்க..?

பாரு.. மாத்திரையெல்லாம் ‘சீரியலுக்கு முன்’ ‘சீரியலுக்கு பின்’னு
எழுதிக் கொடுத்திருக்காரே!
====================
புதுசா கார் வாங்கியிருக்கிற நம்ம சுரேசுக்கு … காரைப்பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கே…?’

எதவச்சு சொல்றீங்க…?’

‘வண்டில்’ ஸ்பீடு பிரேக்கர் எங்கேயிருக்குன்னு கேட்கறாரே…?
================
டாக்டர்.. எனக்கு வயித்துல ஆபரேஷன் நல்லா பண்ணியிருக்கீங்களா..?
தையல் நல்லா போட்டுருக்கீங்க தானே..?

என் மேல நம்பிக்கையில்லனா ரெண்டு டம்ளர் தண்ணி குடிச்சு பாரேன்.. ஒழுகுதான்னு..!!
============
கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?”

“கோழியினால்தான் முட்டை வந்தது”

“எப்படி?”

“ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை

 

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  • 1
  •  
  •  
  •  
  •  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.