Tamil Mokkai collections

1) YOU = Very Nice
YOU = Very Smart
YOU = Very Lovely
YOU = Very Lucky
YOU = Very Beauty
ஐ…. சிரிப்பைப் பாரு…. இது எனக்கு வந்த SMS….
2) ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டு கோபமுடன் வெளியில் அமர்ந்துள்ளான். அப்போது வந்த அப்பா அவனிடம், ஏன் கோபமாக இங்கே உட்கார்ந்துள்ளாய் எனக் கேட்கிறார்.

மகன் சொல்கிறான்….
” அப்பா… இனியும் என்னால் உன் மனைவியிடம் ஒத்துப் போக முடியாது… எனக்கென ஒரு மனைவியைக் கொடு”…

3) ஒரு கவிதை…
திரும்பி…
திரும்பி
பார்க்க வைத்தது…
அவளின்
திரும்பாத முகம்…
ஆனால்…
அவள் திரும்பியதும்
மாறியது
என் முகம்…
ஏனெனில்

சப்பை பிகர் மா……

4) டார்லிங்… எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா இருக்க சொல்றாரு….
சரி… சரி… உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன் தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்….

5) நான் உங்களிடம் ஒரு கல் கேட்டேன்….
ஒரு சிலையே கொடுத்தீர்கள்..
ஒரு இலை கேட்டேன்.. ஒரு மலரையே கொடுத்தீர்கள்…
என் கண்ணீரை துடைக்க ஒரு கைகுட்டைக் கேட்டேன்… நீங்களோ உங்கள் கையைக் கொடுத்தீர்கள்…
உண்மையாகவே நீங்கள் ஒரு செவிடு…….

6) ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது…
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை…
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல…
ஆசிரியர் அடிக்கிறார்…
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது….

7) கேர்ள்: எக்ஸாம் டைம்’ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்…
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்…

8) பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்…
கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு….
பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா…
கேர்ள்: ?!?….

9) கருப்பும் ஒரு கலர்…
வெள்ளையும் ஒரு கலர்…
ஆனால் ப்ளாக் & வொய்ட் டி.வீ. என்பது ஒரு கலர் டி.வீ. இல்ல….
என்ன கொடும சார் இது…….

10) நபர் – 1: இந்த மொபைல் நல்லாருக்கே…எங்க வாங்கின?…
நபர் – 2: ஓட்டப் பந்தயத்தில் இதை வாங்கினேன்…
நபர் – 1: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?
நபர் – 2: மூன்று பேர்…. இந்த மொபைல் ஓனர், ஒரு போலீஸ் மற்றும் நான்….

—- திருடிட்டு வந்த நாய் எப்படி சமாளிக்குதுன்னு பாருங்க மக்களே….

11) ஒரு கல்லூரி வாட்ச்மேனிடம், பெற்றோர்கள்: “இந்த காலேஜ் எப்படி? நல்ல காலேஜ் தானே? ”
வாட்ச்மேன்: “அப்படித்தான் நினைக்கிறேன். இங்குதான் நான் இன்ஜினியரிங் டிகிரி முடித்தேன்.. உடனடியாக எனக்கு வேலை கிடைத்துவிட்டது”
பெற்றோர்கள்: ?!?…..

12) ஹார்ட் அட்டாக்’னா என்ன?
பஸ் ஸ்டாப்’ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்… உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்… அது உன் பக்கத்துல வரும்… உனக்கு வியர்த்து கொட்டும்… அவ தன்னோட அழகான லிப்ஸ்’ஐ ஓபன் பண்ணி ”இந்த லவ் லெட்டர்’ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க”ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு…
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்…….

13) வாஸ்கொடாகாமா இப்போது உயிருடன் இருந்தா அவர் பெயர் என்னத் தெரியுமா?
இஸ்கொடாகாமா… ஏன்னா “WAS ” இறந்த காலம்… “IS ” நிகழ் காலம்….

எங்களுக்கும் இங்கிலீஷ் லிடேரச்சர் தெரியும்ல…. எப்பூடி……

14) எல்லா பிகர்’யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்’ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்’ஸ் மென்டாலிட்டி..

So, Boys are Genius…. Girls are Selfish….

15) காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு….
காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்…
காதலன்: சரி… கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு….
காதலி: ?!?……..

16) நண்பர் – 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா…
நண்பர் – 2: அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் – 1: அவளோட தங்கச்சியைத்தான்….
நண்பர் – 2: ?!?…………..

17) சூப்பர் பஞ்ச் டயலாக்…
நான் நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒன்னும் கெட்டவன் இல்ல…
நான் கெட்டவன்னு உண்மையை ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல…
———- நான் அவன் இல்லை….

18) குழந்தை: அம்மா… காந்தி செத்துட்டாரா?
அம்மா: ஆமா செல்லம்…..
குழந்தை: நேரு?
அம்மா: அவரும் போய்ட்டாருடா….
குழந்தை: அறிஞர் அண்ணா?…
அம்மா: அவரும் போய் சேந்துட்டாருடா……
குழந்தை: அப்ப நாட்டுல நல்லவங்களே இல்லையாமா?….
அம்மா: கவலை படாதே செல்லம்… இந்த தமிழ் நாட்டுல “மோகனச்சாரல்” ன்னு ஒருத்தர் ப்ளாக் எழுதிகிட்டு இருக்கார்… அவுங்க போதும் இந்த நாட்டுக்கு…..

19) கர்நாடகா தண்ணீரும், கேர்ள்’சின் கண்ணீரும் ஒண்ணுதான்… ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்… ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..
—– வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்…..

20) பெஸ்ட் கவிதை in 2010 :
உன்னை யாரும்
காதலிக்கவில்லை
என்று கவலைப்பட வேண்டாம்…
அது
உன் வருங்கால
மனைவியின்
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்…………
(ஹையோ….ஹையோ…. பிகர் மாட்டாததுக்கு எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு……)

 

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.